சாத்தனூர் அணை நீர்மட்டம் 112.15 அடியாக உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி பரவலான மழையால் நீர்வரத்து

தண்டராம்பட்டு, செப். 7: சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து வலது புறம், இடது புறம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாத்தனூர் அணை 100 அடியாக நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையில் சமீபமாக சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் படிப்படியாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் நேற்று மாலை சாத்தனூர் அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை கிடுகிடுவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை