சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

சிவகாசி, ஜூலை 8: சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதித்த நிலையில் அங்கு சட்ட விரோதமாக அதிக தொழிலாளர்களை வைத்து பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த விதிமீறல் குறித்து மாரனேரி விஏஓ சுந்தரேசன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் நீராத்திலிங்கம், போர்மென் இருளப்பன், மேனேஜர் சங்கர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை