சர்வதேச மகளிர் தினம்: சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் இன்று பெண்களுக்கு முற்றிலும் இலவசம்

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் இன்று பெண்களுக்கு முற்றிலும் அனுமதி இலவசம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உட்பட பல  புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணமின்றி பெண்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என கூறியுள்ளது.  மாமல்லபுரத்தில் சாதாரணமாக உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டும். இன்று மகளிர் தினம் என்பதால் பெண்களுக்கு முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை