சம்பளம் வழங்கக்கோரிகீழப்பாவூரில் பீடி கம்பெனி முற்றுகை

பாவூர்சத்திரம், டிச. 25: கீழப்பாவூரில் தனியார் பீடி கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பீடி கம்பெனி சார்பில் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. நேற்று 300க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி கம்பெனி முன்பு திரண்டனர்.இதையடுத்து கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், முன்னாள் துணைத் தலைவர் தங்கச்சாமி, அதிமுக ஓபிஎஸ் அணி நகர செயலாளர் ஜெயடீனா முருகன் ஆகியோர் முன்னிலையில் கம்பெனி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் பொங்கலுக்கு முன்னர் விடுமுறை சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தரக் கோரி பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை