சமயபுரம்-ஸ்ரீரங்கம் திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை நகர் வெறிச்சோடியது

கந்தர்வகோட்டை,ஏப்.19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏரளாமான பெண்கள், ஆண்கள் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டத்திற்கு மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்று உள்ளனர். மேலும் அவர்கள் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டதை பார்த்துவிட்டு, ஸ்ரீரங்கம் தேரோட்டதையும் கண்டு சாமி தரிசனம் செய்து வர வேண்டிய சூழ்நிலையில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் திருச்சி சென்றுள்ளனர். ஆகையால் கந்தர்வகோட்டை கடைவீதியும், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபார கடைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை