சபரிமலையில் பலத்த மழை பெய்தால் பம்பையிலேயே பக்தர்கள் தங்க ஏற்பாடு: சிறப்பு அதிகாரி தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தற்போது மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா பரவலை தொடர்ந்து பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்தவுடன் திரும்பி விட வேண்டும். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபரிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். மழை குறைந்ததும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் பக்தர்கள் சன்னிதானம் செல்வதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து இரவில் பலத்த மழை பெய்தால் பக்தர்களை பம்பையிலேயே தங்குவதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜூன் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் நேற்று பம்பையில் ஆய்வு நடத்தினர்.இதுகுறித்து அர்ஜூன் பாண்டியன் கூறியதாவது, ‘சபரிமலையில் பலத்த மழை பெய்யும் ேபாது பக்தர்கள் பம்பையில் இரவு நேரங்களில் தங்க வைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் பக்தர்கள் பம்பையிலேயே தங்க அனுமதிப்படுவார்கள்’ இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!