சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனா   பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே   அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்   வரை தினமும் முன்பதிவு செய்யும் 35 ஆயிரம் பக்தர்களுக்கு  அனுமதி  அளிக்கப்பட்டு வந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத  பக்தர்களுக்கு  நிலக்கல் உள்பட சில பகுதிகளில் உடனடி முன்பதிவு செய்யும்  வசதியும்  செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், தினசரி பக்தர்களின்  எண்ணிக்கை நேற்று முதல் 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40  ஆயிரம் ேபருக்கு ஆன்லைன் மூலமும், 5 ஆயிரம் பேருக்கு உடனடி முன்பதிவு  மூலமும்  தரிசனம் செய்யலாம். ” நீலிமலை பாதை ”சபரிமலையில்  பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பயன்படுத்தப்படும் நீலிமலை பாதை கனமழையால் சேதமாகி உள்ளது. இது விரைவில்  சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என தேவச ம் போர்டு தலைவர் அனந்தகோபன்  தெரிவித்தார்….

Related posts

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதி லட்டு விவகாரம்; ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக முற்றுகை!

அனுர குமார திசநாயக்கவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. நன்றி தெரிவித்த இலங்கை புதிய அதிபர்!!