சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் டிரைலர் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம், பீஸ்ட். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். சர்கார் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார்.இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகயேன் எழுதிய ‘அரபிக்குத்து’, கு.கார்த்திக் எழுதி விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில், அமர்க்களமான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. விஜய்யின் அதிரடி சண்டைக் காட்சிகளும், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய ஷாப்பிங் மால் ஒன்றும் என விறுவிறுப்பான காட்சிகளால் பீஸ்ட் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இந்த டிரைலர் யுடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படத்தின் டிரைலர், பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்பது, முழுமையான திரை மற்றும் நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலிய மைப்புடன் ஐமேக்ஸ் போன்ற அனுபவத்தை தருவதாக இருக்கும். செல்போனில் வீடியோ பார்க்கும்போது, திரையின் அளவுக்கு ஏற்ப வீடியோவை மாற்றுவோம். இந்த டெக்னாலஜி மூலம் வீடியோ தானாகவே திரை அளவுக்கு ஏற்ப மாறிவிடும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை