சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களையும், அரசு ஊழியராக்கி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குவதாக அறிவித்ததை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பேரணியாக புறப்பட்டு அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். பின்னர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்