சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாக, அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான ரூ.11.86 கோடி சொத்துக்கள் கடந்த 2020ம் ஆண்டில் முடக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை பலமுறை பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் 31ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை நேற்று அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பி உள்ளது….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது