சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

 

ஈரோடு, ஜூலை 2: ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் கோபி கவின் கார்டன் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் குபேந்திர பிரபு (44). இவர், கடந்த 5ம் தேதி சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குபேந்திர பிரபுவிடம் இருந்து 529 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குபேந்திர பிரபுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுவிலக்கு போலீசார் எஸ்பி ஜவகர் மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, குபேந்திர பிரபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கோவை மத்திய சிறையில் உள்ள குபேந்திர பிரபு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை நேற்று மதுவிலக்கு போலீசார் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’