சட்டப்பேரவை மாடத்தில் முதல்வர் மனைவி, மகள்

சென்னை: தமிழக சட்டபேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளிட்டார். இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி தூர்க்கா, மகள் செந்தாமரை, மருமகள் கீர்த்திகா உதயநிதி, பேரன் நலன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் சட்டசபை பேரவை மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தனர். முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பை கேட்டனர். மேலும் மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார். அவர் பேச்சு முழுவதையும் அவரது குடும்பத்தினர் ரசித்து கேட்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை