சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஓமலூர், கருப்பூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஓமலூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: பல இடங்களில் எதிர்க்கட்சியினருக்கு பாதகமாகவும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவும் மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதனால், தான் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம். தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக நடக்காவிட்டால் நாங்கள் நடக்க வைப்போம். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கி, அந்த மாநிலத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் ஆளும் கட்சி தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால், தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை ஏற்படும்.    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.  …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…