சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓபிஎஸ் சொன்னதில் என்ன தவறு? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை: சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையே கிடையாது. பழுத்த மரத்தில்தான் கல்லடி படும். சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை மறுத்து கருத்து சொல்லவில்லை. காரணம், அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஒருங்கிணைப்பாளர் சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. வளர்ச்சி திட்ட பணிகளில்  பாரபட்சம் பார்க்க கூடாது என்றார். பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா என்று கேட்டதற்கு செல்லூர் ராஜூ, ‘‘தமிழகத்தில் தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக, எதிர்க்கட்சி போல் செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். நாங்கள் ஜனநாயக முறைப்படி அவகாசம் வழங்கியுள்ளோம்’’ என்றார்….

Related posts

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…