க.பரமத்தி ஒன்றியம் நடந்தையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்-சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

க.பரமத்தி : டெங்கு கொசு புழு மற்றும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி க.பரமத்தி ஒன்றியம் நடந்தை சுற்று பகுதியில் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்றது.இதனை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் வலியுறுத்தியதாவது: பலவித காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே உருவாகிறது. இதனால் வீடுகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருள்களின் மீது மழைநீர் அல்லது கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் சுற்று புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனவே தண்ணீர் தொட்டி, மழை நீர் தேங்கும் பயனற்ற ஆட்டுக்கல், உரல், அடுக்கி வைக்கப்பட்டுள்ள பயனற்ற வாகன டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் வீடுகளை சுற்றி தண்ணீரை தேங்க விட வேண்டாம். நீர் கலன்களை நன்றாக மூடி வைத்து சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுபுழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்….

Related posts

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்

தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 விற்பனை: பொதுமக்கள் கவலை..!!

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பது தான் மோடி ஆட்சியின் லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு