க.பரமத்தி அருகே மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி

 

க.பரமத்தி, ஜூன் 7: க.பரமத்தி அருகே புன்னம் சுற்று பகுதியில் நேற்று மிதமான மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நாட்களாக அளவிற்கு அதிகமாக பகலில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுத்தது.

இந்நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு, 1 மணி நேரம் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் புன்னம் சுற்று பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் சைக்கிள் மற்றும் டூவீலரில் சென்ற பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது பெய்த மழையால் மானாவாரியில் சாகுபடி செய்த எள் சோளம், கம்பு உள்ளிட்ட தீவன பயிர்கள் செழித்து வளர பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை