கோஷ்டி மோதலில் ஈடுபட்ட அமமுக உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு

குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் கடந்த 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில்  கெருகம்பாக்கம் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட 9வது வார்டு இந்திரா நகரில் வாக்குச்சாவடி மையம் அருகே திமுக மற்றும் அமமுகவினர் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் உருட்டுக்கட்டையால் தாக்கியும், மிளகாய் பொடி தூவியும், கல்லால் மாறி, மாறியும் இரு கோஷ்டியினரும் தாக்கிக் கொண்டனர். இதில் திமுக மற்றும் அமமுகவினர் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளித்தனர். புகாரின்படி திமுக பிரமுகர் காசி, அவரது ஆதரவாளர்கள் உட்பட 25 பேர் மீதும், அமமுக ஒன்றிய செயலாளர் முத்தையா உட்பட 5 பேர் மீதும் மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   …

Related posts

அந்தியூர் அருகே ரூ.9.23 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

தர்மபுரி அருகே பயங்கரம் ஆண், பெண்ணை கடத்தி சரமாரி குத்திக்கொலை

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமன் கைது