கோவை ஓட்டல் பப்பில் டான்ஸ் நகை வியாபாரி மீது தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு

 

கோவை, ஆக. 14: கோவை காந்திபுரம் பார்க்கேட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அறைகள், பார், உணவகம், பப் செயல்படுகிறது. பப்பில் மது போதையில் வாடிக்கையாளர்கள் சிலர் நடனமாடி வருவதாக தெரிகிறது. சம்பவத்தன்று பப்பில் மது குடித்த வாலிபர்கள் போதையில் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே இருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த ஓட்டல் பவுன்சர்கள் அவர்களை ஆட வேண்டாம், தகராறு செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

ஆர்.எஸ்.புரம் ராகவன் தெருவை சேர்ந்த நகை வியாபாரியான பாலஹரி விக்னேஷ் (22) மற்றும் அவரது நண்பர் அகிலேஷ் ஆகியோரை பவுன்சர்கள் அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து சென்றனர். பின்னர் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து அவர்களை மிரட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பாலஹரி விக்னேஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் பவுன்சர் செக்யூரிட்டி மேலாளர் ராஜேஷ் கண்ணன், பவுன்சர்கள் அரவிந்த், ராஜா, சிவா, மணி ஆகியோர் மீது தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பொன்னமராவதியில் காவலர் குடியிருப்பு கட்ட வேண்டும்

புதுகை ஆர்டிஓ அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம்