கோவையில் பரபரப்பு திமுகவினர் தங்கியிருந்த வீடு, கார் மீது தாக்குதல்: மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

கோவை: கோவையில் திமுகவினர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர்களது கார் ஆகியவற்றை நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கோவை மாநகராட்சியின் 88வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் சகோதரரான சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான செங்குளம் அருகே தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் திடீரென கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து திமுகவினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். சம்பவயிடத்தை குனியமுத்தூர் போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலையில் திடுக் தகவல்கள்: 6 பேரிடம் விசாரணை