கோவிந்தகுடி ஊராட்சியில் 4 தெருக்களுக்கு புதிதாக தார்சாலை: தமிழக அரசுக்கு நன்றி

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி ஊராட்சியில் நான்கு தெருக்களுக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி ஊராட்சி பகுதிகள் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் பல்வேறு காலகட்டங்களில் புதிதாக பல நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வூராட்சியில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த ஆட்சியில் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய திமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் தெற்குதெரு, மாஸ் நகர் 1, முத்துநகர், முகமது அலி ஜின்னா தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களில்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கோவிந்தகுடி ஊராட்சி நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா