கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

நெல்லை, நவ.8: பணகுடி அருகேயுள்ள அண்ணாநகர் கோவில்விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (24). இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு பணகுடி காவல் நிலையத்தில் போக் சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணிக்கராஜ் கைதாகி ஜாமீனில் உள்ளார். நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக மாணிக்கராஜ் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையறிந்த நெல்லை நீதிமன்றம் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பணகுடி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் போலீசார் மாணிக்கராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை