கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

 

கரூர், அக். 9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னதாக இணைச்செயலாளர் இளங்கோ வரவேற்றார். மாநில துணைத் தலைவர் செல்வராணி கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். அனைத்து நிர்வாகிகளும், சார்பு சங்க நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கவேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலைநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு