கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், ஜூலை 23: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கால முறை ஊதியம் வழங்கிட கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மை பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு ஊதியம் மற்றும் அரியர் தொகையினை வழங்க வேண்டும்,

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மற்றும்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி