கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.6: தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவுவைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும்.விவசாய உபகரணங்கள், வாகனங்கள் வாங்குதல், கட்டிடம் கட்டுதல் போன்றவைகள் தேவையின் அடிப்படையிலும் உண்மையான பயன் உள்ளது என்பதையும் உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் பல லட்சங்கள் முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது