கோயில் பூசாரியாக மாறிய மலையாள வில்லன் நடிகர்

திருவனந்தபுரம்: கடந்த 40 வருடங்களாக மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 215க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், பாபு நம்பூதிரி (74). மம்முட்டியின் ‘நிறக்கூட்டு’, மோகன்லாலில் ‘தூவானதும்பிகள்’ உள்பட பல படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து வரும் அவர், தற்போது கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள மன்னைக்காடு கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். 300 வருட பழமையான கோயிலான இதன் மேல்சாந்தி வராதபோது, பூசாரி பொறுப்பை பாபு நம்பூதிரி ஏற்றுக்கொள்கிறார். அவர் கூறுகையில், ‘நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். மேல்சாந்தி (தலைமை பூசாரி) வர இயலாதபோது நான் அதை ஏற்று நடத்துவேன். அதுதான் என் கர்மா. இந்தக் கோயிலில் வழக்கமான வழிபாடுகள் நடக்கின்றன. நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை’ என்றார்….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து