கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானை, ஜூன் 27: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் பகுதியில் மகாலிங்கமூர்த்தி கோயிலி 7ம் ஆண்டு உற்சவ திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு என 2 வகையான மாட்டு வண்டிகள் தனித்தனியே 2 கட்டங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.

இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளுக்கு பரிசுத் தொகையும், வெற்றிக்கான கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் முதலாவதாக வந்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு ஆட்டுக்கிடாய் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் ஆரவாரம் செய்து போட்டியை கண்டுகளித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை