கோயில் சொத்து விபரங்களை தெரியப்படுத்த கோரி வழக்கு

மதுரை, செப். 14: நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சேரன்மகாதேவியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ராமசாமி பெருமாள் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்கள், கோயில் நடை திறப்பு நேரம், உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. கோயிலில் பல இடங்களில் தரைகள் மற்றும் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி பெருமாள் கோயில் பகுதியை சீரமைத்து முறையாக பராமரிக்குமாறும், கோயில் சொத்துக்கள், நடை திறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்களை தகவல் பலகையாக பக்தர்கள் பார்வைக்கு வைக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்.15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்