கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும், தூய்மையான சூழலில் பிரசாதம் வழங்க வேண்டும் என்று வழிமுறைகளை வெளியிட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், இத்திட்டத்தினை சீரிய முறையில் தனி கவனத்துடன் செயல்படுத்த கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தயாரிக்கப்படும் பிரசாதம் சுவை மற்றும் தரத்துடன் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் பக்தர்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்று இத்திட்டத்தில் பங்கு கொண்டு நிதியுதவி அளிக்க பக்தர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை சிறப்புற செயல்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. * ஒரு நாள் பிரசாத செலவை கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும்.* ‘நாள்முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் நன்கொடையாளர்களும் பங்கு பெறலாம்’ என்ற அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும்.* பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்கள் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.* பக்தர்கள் இறைவனை தரிசித்து விட்டு வரும் பாதைக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்படாத இடத்தில் பிரசாதம் வழங்கப்பட வேண்டும்.* தொன்னையினை (இலையினால் செய்யப்படும் பிளேட்) பயன்படுத்தி மட்டுமே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட வேண்டும் * பிரசாதம் வழங்கும் இடத்தில் நெரிசல் ஏற்படாதவாறு வரிசை அமைப்பு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். * கோயில் பணியாளர்கள் தூய்மையான முறையில் கையுறைகளை அணிந்து பிரசாதம் வழங்கப்பட வேண்டும்* பிரசாதம் வழங்கும் இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக பேணப்பட வேண்டும். * பிரசாதம் வழங்கும் இடத்துக்கு அருகில் பக்தர்களால் பயன்படுத்தப்பட்ட தொன்னையினை சேகரிக்க உரிய அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை