கோத்தகிரியில் கால்நடைகள் சாலையில் உலா வருவதால் இடையூறு

கோத்தகிரி : கோத்தகிரி நகர்ப்புற பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் சாலையில் உலா வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலை வழி சந்திப்புகளான பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் பகல் நேரங்களில் சாலைகளில் உலா வந்து சாலையோர வியாபாரிகளின் கடைகளில் உள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதற்காக வருகின்றன.மேலும், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. இதனால், மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. எனவே, சாலைகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை