கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் குதிரை பந்தயம் துவங்கியது

ஊட்டி: கோடை விழாவின் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் 135வது குதிரை பந்தயம் நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் சமயத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான 135வது குதிரை பந்தயம் நேற்று துவங்கியது ஜூன் மாதம் வரை நடக்கவுள்ளது இதற்காக பெங்களூர், சென்னை, புனே உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 600 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.போட்டியை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடந்தது இதில் முதலிடம் பிடித்த குதிரைகளின் உரிமையாளர்கள் ஜாக்கிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் முக்கிய போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி வரும் 30ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 2 போட்டி மே 1ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள் மே 15ம் தேதி நடக்கிறது. இது தவிர ஊட்டியில் நடக்கும் முக்கிய போட்டியான நீலகிரி தங்க கோப்பை போட்டி ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது…

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு