கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நவ. 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு காவல்துறை அவகாசம் கூறியதை அடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடித்தது. வழக்கில் தொடர்புடைய சயான், ஜங்க்ஷிர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர், மேல் விசாரணைக்கு அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மறைந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கனகராஜின் உறவினர் ரமேஷையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ரமேஷையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. …

Related posts

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!