கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை பயிற்சிப்பள்ளியில் மோசஸிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

கோவை: கோவையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மோசஸிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கொள்ளை வழக்கில் கைதான பிஜின்குட்டி சகோதரர் மோசஸிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் விசாரணை நடைபெறுகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின்குட்டியிடம் 3 முறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொடநாடு வழக்கில் கேரளாவை சேர்ந்த மோசஸ் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிஜின்குட்டியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரர் மோசஸிடம் விசாரணை நடைபெறுகிறது. நேற்று கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கனவே சசிகலா உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த அ.தி.மு.க. நிர்வாகி சஜிவன் மற்றும் அவரது அண்ணனிடம் தனிப்படையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்….

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சறுக்குப்பாதை