கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தண்டனையை எதிர்த்து அப்பீல் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான  யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை, அவரது டிரைவர் அருண், குமார் (எ) சிவக்குமார், சதீஷ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, சந்திரசேகரன், பிரபு, கிரிதருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 10 பேரும் சாகும் வரை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கான தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். அதில், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். இம்மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிசிஐடி போலீசார் மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாய் சித்ரா ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப். 11க்கு தள்ளி வைத்தனர்….

Related posts

மருத்துவமனையில் இருந்தபோது நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு நன்றி: நடிகர் ரஜினி அறிக்கை

நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது