கொழிஞ்சாம்பாறையில் படுக்கை அறையில் மறைத்து வைத்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

பாலக்காடு, அக்.8: பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் வீட்டின் படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொழிஞ்சாம்பாறை சுற்று வட்டார பகுதிகளில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் கொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாட்டுக்கல், அத்திக்கோடு, கொழிஞ்சாம்பாறை டவுன், நடுப்புணி, கருவப்பாறை பகுதிகளிலும், பள்ளி, கல்லூரி பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் கொழிஞ்சாம்பாறை பள்ளித்தெருவை சேர்ந்த ஆஷாத் என்பவரின் வீட்டை போலீசார் சோதனை போட்டனர். இதில் படுக்கை அறையின் காட்டிலுக்கு அடியில் மூன்று மூட்டைகளில் ஆயிரத்து 350 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு பிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆஷாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்