கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சி குன்றி காணப்படும் எள் பயிர்

கொள்ளிடம்,மே19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த பருவ மழையினால் சம்பா நெற்பயிர் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் தீவிர முயற்சியின் காரணமாக நீரில் அழுகிய நெற்பயிர் போக மீதமுள்ள பயிரை விவசாயிகள் மீண்டும் வளரச் செய்தனர். அழிந்த பகுதியில் புதியதாக நடவு செய்தும் பரவலாக சேதம் அடைந்த நெற்பயிரில் உரிய சத்தான உரங்கள் இட்டும் வளரச் செய்து பின்னர் அறுவடை செய்தனர். சென்ற வருடத்தை விட இந்த வருடம் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் அதிக லாபம் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்கு அதிக நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெற்பயிர் இருந்து வந்தது. அதே நேரத்தில் சம்பா அறுவடையின் போது அறுவடைக்கு முன்பு உளுந்து மற்றும் பயறு புதிய நெற்பயிரை விவசாயிகள் விதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தொடர் மழையின் காரணமாக காலம் தள்ளிப் போனதால் எதிர்பார்த்த அளவுக்கு உளுந்து பயறு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் உளுந்து மற்றும் பயிர் சாகுபடி செய்வது குறைந்தது.அதற்கு பதிலாக இந்த வருடம் விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி பயிரிட்டு உள்ளனர். ஒருபுறத்தில் பருத்திப்பயிர் சாகுபடி செய்தாலும் மற்றொரு புறத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் எள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். அதிகம் செலவு செய்யாமல் கோடை காலத்திலேயே எள் பயிர் செய்து அறுவடை செய்யும் போது ஏக்கருக்கு சுமார் 50,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்த எள் பயிர் தற்போது கொள்ளிடம் பகுதியில் குறைந்த அளவே பரப்பளவில் சாகுபடி செய்திருந்தாலும் கடந்த 20 தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் எள் பயிர் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றியுள்ளது.

நன்கு வளர்ச்சி பெற்று வந்த எள் பயிர் கடந்த சில தினங்களாக வளர்ச்சி குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலைபடி ஒரு ஏக்கருக்கு ஒன்று அல்லது இரண்டு குவின்டால் மட்டுமே எள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 40 நாள் உள்ள பயிராக என் பயிர் வளர்ந்துள்ளது.மீதமுள்ள 20 நாட்களில் எள் பயிரை வளர செய்ய முடியுமா, மீண்டும் எதிர்பார்த்த அளவுக்கு வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின்படி உரம் மற்றும் பயிர் நுண்ணூட்டம் தெளித்து வளர செய்ய முடியுமா என்ற கேள்விகளை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். இதற்கு வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறுகிய காலத்துக்குள் எள் பயிரை செழித்து வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எள் பயிர் சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை