கொள்ளிடம் அருகே சாலையில் இடையூறாக இருந்த முள் செடிகள்

 

கொள்ளிடம்,ஜன.19: கொள்ளிடம் அருகே சாலையில் இடையூறாக இருந்த முள் செடிகளை கிராம மக்களே ஒன்று கூடி வெட்டி அகற்றினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து சந்தப்படுகை கிராமத்துக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இந்த சாலை தொடர்ந்து திட்டுபடுகை நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரைசாலையாகவும் இருந்து வருகிறது.

இந்த சாலையின் குறுக்கே ரயில் பாதாள சாலை அமைந்துள்ளது. பாதாள சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்கு சாலையின் இரு புறங்களிலும் கருவேல முள் செடிகள் நீண்டு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் இரவு நேரங்களில் செல்லும்போது மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் சந்தப்படுகை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் சாலையோரம் இடையூறாக இருந்து வந்த முள் செடிகளை அகற்ற முடிவு செய்து கிராம மக்களே முள் செடிகளை வெட்டி அகற்றினர். 100 மீட்டர் தூரத்துக்கு இருவர் வீதம் பத்து பேர் பணியில் ஈடுபட்டு நேற்று சாலையோரம் இருந்த முள் செடிகளை அகற்றினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை