கொல்லங்கோடு, திருவட்டார் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

 

நித்திரவிளை, அக்.7: கொல்லங்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு மேடவிளாகம் மகளிர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்களை நின்றனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான தெற்கே கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் நோபிள் (22) மற்றும் கொல்லங்கோடு அருகே சூசைபுரம் பகுதியை சேர்ந்த மிஜின் (19) என்பது தெரிய வந்தது. நோபிள் ஐ.டி.ஐ. படித்து விட்டு மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், மிஜின் களியக்காவிளை அருகே ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர். குலசேகரம்: திருவட்டார் போலீசார் வேர்கிளம்பி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து வாலிபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கல்லங்குழி அருகே முண்டவிளை பகுதியை சேர்ந்த அபினேஷ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அபினேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்