கொலை நகரமாக புதுச்சேரி மாறிவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி அரசு மின் விநியோகத்தை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக மாறிவிடும். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரியாங்குப்பம், திருக்கனூர், காமராஜர் நகர், கவிக்குயில் மற்றும் நகரப்பகுதியில் கஞ்சா சரளமாக விற்கப்படுகிறது.வெளிநாட்டினர் கோகைன் கொண்டு வந்து விற்கிறார்கள். காவல்துறை ஒத்துழைப்போடு இது நடக்கிறது. முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமி விலகினால்தான் புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டிருக்கும். அவரால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தர இவர்களுக்கு தெம்பு, திராணி இல்லை. பாஜகவின் கை பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து விட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்: எடப்பாடிக்கு திமுக கடும் கண்டனம்

அருந்ததியர் உள்இடஒதுக்கீடு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு எடப்பாடி நன்றி

இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர்கள் பாதிப்பு ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக 6ம் தேதி ஆர்ப்பாட்டம்