கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: கொரோனா பாதிப்பு நிலவரங்களை  கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று அதிகமாக இருந்த சென்னையிலும் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோன தடுப்பு நடவடிக்கையாக 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை ஆய்வு செய்து அவ்வப்போது தேவையான அறிவுரைகளை தமிழக அரசுக்கு வழங்குவது தொடர்பாக கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்யக்கூடிய வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இல்லாத மருத்துவர்கள் 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 
இந்த குழுவில் அரசு அலுவலக இல்லாத மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதில் சுகானந்தம், குழந்தைசாமி, மனோஜ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த குழுவை பொறுத்தவரையில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்துவது குறித்து கண்காணித்து அரசுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழிக அரசிற்கு பரிந்துரைகளையும் வழங்கும். தேவைக்கு ஏற்ப இந்த குழுவின் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்