கொரோனா பரவல் தடுக்க இன்று முழு ஊரடங்கு கூட்டமின்றி வெறிச்சோடிய மீன், இறைச்சி கடைகள்

நாகை : கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாகை மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் நேற்று இயங்கவில்லை.நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் நேற்று அனைத்து இறைச்சிகடைகளும் விடுமுறை விடப்பட்டது.எந்த நேரமும் கூட்டமாக காணப்படும் பாரதி மார்க்கெட் மீன் விற்பனை நிலையம், கோழி மற்றும் ஆடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் முழுவதுமாக அடைக்கபபட்டு இருந்தது. இதனால் இந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர்கள் சென்று வர தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.