கொரோனா தொடர்பான உதவிக்கு மாநகர காவல் துறை உதவி எண்கள் அறிவிப்பு: 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

சென்னை: கொரோனா தொடர்பான உதவிக்கு பொதுமக்கள், மூத்த குடிமக்கள் 24 மணி நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில் அவசர உதவி எண்கள் மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கொரோனா தாக்கம் 7 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதேநேரம் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறியவும், ஊரடங்கு நேரத்தில் வெளியூர் செல்லும் வயதானவர்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள் இ-பாஸ் பெறுவது தொடர்பான சந்தேகங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் நபர்கள், ரெம்டெசிவர் மருந்து பெறுவது தொடர்பான உதவிகள் பெறும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் அவரச உதவி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 9498181236, 9498181239 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியாக வெளியே செல்ல முடியாத ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு பொருட்கள் வாங்கவும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்