கொரோனா தளர்வு எதிரொலி 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

சென்னை:  தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கொரோனா  தளர்வு காரணமாக 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இதையடுத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. எனினும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 2021 ஜனவரியில் பள்ளிகள் திறக்க சுகாதாரத்துறை, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் ஊரடங்கின் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த என்று அரசு அனுமதி வழங்கியது. அதன்பேரில் இன்று முதல் தமிழகத்தில் சுமார் 12,500 பள்ளிகளிலும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க உள்ளது. இதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.  ஏற்கனவே பத்தாம் வகுப்பு திறக்க அனுமதியளித்தபோது விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்