கொரோனா சூழல் குறித்து காங். எம்பிக்களுடன் சோனியா இன்று ஆலோசனை

புதுடெல்லி: நாட்டில் கொரோனா சூழல் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி எம்பிக்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் 4 லட்சத்தை எட்டியுள்ளது. மக்கள் பலரும் மருத்துவமனையில் இடமின்றி,  ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கின்றனர். தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நிலைமை கை மீறிப் போய் உள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இன்று கட்சியின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச்  சேர்ந்த அனைத்து எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் கொரோனா சூழல், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய  விசயங்கள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது….

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்