கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க கோரி கல்லூரி மாணவிகள் மனு

மொடக்குறிச்சி: கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க கோரி கல்லூரி மாண்வ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இருந்து தினசரி காலை 7.15 மணிக்கு ஈரோட்டிற்கு 42ம் நம்பர் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. கொரோனா காலத்தில் பயணிகள் இல்லாததால் இந்த அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. கொரோனா சீரான பின்பு இதுவரை நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் காலை நேரத்தில் எழுமாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஈரோடு மாநகரத்திற்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கூறி அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சிவகிரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் முன் கோரிக்கை மனுவுடன் திரண்டனர். இதை தொடர்ந்து கோரிக்கை மனுவை ஈரோடு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நேரில் வழங்கினர்….

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்