கொட்டுவதை தடுக்க வேண்டும்

கரூர்: கரூர் திருக்காம்புலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியின் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிச் செல்லும் இந்த வாய்க்கால் முறைப்படி தூர்வாரப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வாய்க்காலில் அதிகளவு பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் கொட்டப்படுவதால் வாய்க்காலின் தன்மை முற்றிலும் மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அகற்றி தூய்மையான தண்ணீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை