கொட்டாய் மட்டம் பகுதியில் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்

 

கூடலூர், ஜூலை 23: கொட்டாய் மட்டம் பகுதியில் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டம், தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சுகுன்னு, ஒற்று வயல், பாலம் வயல், செம்பக்கொல்லி, மச்சி கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடமாடும் காட்டு யானைகளை விரட்ட கோரிய பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வளர்ந்திருந்த புதர்கள் வெட்டப்பட்டு காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடலூர் வனச்சரக பணியாளர்கள், யானை விரட்டும் காவலர்கள், சிறப்பு குழு வனக்காவலர்கள், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் தொடர்ந்து எஸ்டேட் பகுதிக்குள் இருக்கும் யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்