கொடைக்கானல் முக்கிய சாலைகளில் வர்றாங்க… நிப்பாட்டுறாங்க… போறாங்க: போக்குவரத்து நெரிசலால் திணறல்

கொடைக்கானல்:கொடைக்கானலில் முக்கிய சாலையாக இருப்பது அண்ணா சாலை. இந்த அண்ணா சாலை பகுதியில் காவல் நிலையம், தாலுகா அலுவலகம், மகளிர் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவார்கள். சமீபகாலமாக இந்த சாலையில் பூக்கடைகள், பழக்கடைகள், உள்ளிட்ட கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதுதவிர இந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் கவி தியாகராஜர் சாலை, 7 ரோடு சாலை, நாயுடுபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் பார்க்கிங் வசதி குறைவு. அதனால் கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தி விட்டு போய் விடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற எண்ணமே இல்லாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதுபோன்ற வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்டறிந்து அபராதம் விதித்தால் தான், விதிமீறல்கள் தடுக்கப்படும், போக்குவரத்து நெருக்கடியும் குறையும், என்றனர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்