கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் போயின் சியானா பூக்கள்

கொடைக்கானல், செப். 24: கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் போயின் சியானா பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் மலைப்பகுதியில் மஞ்சள் நிறத்திலானா போயின் சியானா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக் கூடிய வகைகளாகும்.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய இந்த மலர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கின்றன. மர வகைகளை சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் அதிக அளவில் பார்க்க முடியும். தற்போது இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மலைச்சாலைகளில் பூத்துள்ள மஞ்சள் வண்ண பூக்கள் சுற்றுலாப் யணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை