கொடைக்கானலில் சாரல் மழை வேகவைக்கும் வெயிலும் இல்லை வெடவெடக்கும் குளிரும் இல்லை-சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இதமான சாரல் மழை பொழிவதால், சுற்றுலாப் பயணிகள் குவிந்து, இயற்கையை ரசித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு மார்ச் முதல் மே மாதம் வரை குளுகுளு சீசனும், நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை குளிர் சீசனும் இருக்கும். வழக்கமாக மார்ச் முதல் வாரத்திலேயே குளுகுளு சீசன் தொடங்கும். ஆனால், இதுவரை நகரில் வறண்ட தட்பவெப்பநிலையே நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று சாரல் மழை பெய்ய தொடங்கியதால், வறண்ட சூழல் மாறி, குளுகுளு சீசன் தொடங்கியது. இதனால், நகரில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.காலை முதல் வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்துச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால், கொடைக்கானல் சீசன் மற்றும் கோடை விழா மலர் கண்காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால், இந்தாண்டு கோடை விழா மலர் கண்காட்சி நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால், இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு