கொடுமுடியில் முன்கள பணியாளர்களுக்கு அரிசி, உணவு வழங்கல்

மொடக்குறிச்சி :  கொடுமுடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது சொந்த செலவில் அரிசி மற்றும் மதிய உணவு வழங்கினார்.கொரோனோ தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில், பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது சொந்த செலவில் 10 கிலோ அரிசி சிப்பம் மற்றும் மதிய உணவுகளை நேற்று வழங்கினார். சிவகிரி பேரூராட்சியில் 60 பேருக்கும், சென்னசமுத்திரம் பேரூராட்சியில் 40 பேருக்கும், கொடுமுடி பேரூராட்சியில் 80 பேருக்கும், ஊஞ்சலூர் பேரூராட்சியில் 30 பேருக்கும் என மொத்தம் 210 சிபபம் அரிசியை முன்கள பணியாளர்களுக்கு வழங்கினார். அதேபோல், முன்கள பணியாளர்கள், ரயில் நிலையம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்கள் என 250க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவுகளை வழங்கினார். தொடர்ந்து பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு ஊரடங்கு முடிவும் வரை மதிய உணவு வழங்குவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், கொடுமுடி பேரூர் செயலாளர் சேட், ஜமாத் தலைவர் அபுபக்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சதீஷ்குமார், நகர இளைஞரணி கார்த்தி, சென்னசமுத்திரம் முன்னாள் பேரூர் செயலாளர் சக்திவேல், கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் அண்ணாதுரை, வக்கீல் பிரிவுவைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், துரை சந்திரன், சுப்புரத்தினம் ராஜ்குமார், கார்த்தி, சாமி கந்தசாமி, மோகன்ராஜ், மனோகரன், ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கணபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்